ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களம் இறங்க நான் தயார்!

Share

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு  எதிர்வரும்காலத்தல் அரசியல் கூட்டணியொன்று மலரவுள்ளது எனவும் அதன்மூலம் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு தயார் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

ஜனாதிபதி தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும்.

வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும்.ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை அந்த கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராக களமிறங்க நான் தயார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு