திடீர் விபத்துக்களால் நாள் ஒன்றிற்கு 35 மரணங்கள் பதிவு!

Share

திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஏப்ரல் மாதத்தில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு