என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்

Share

என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என அமெரிக்க மக்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாண்டு அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப் என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடும்.

தற்போதைய அதிபர் ஜோபைடன் மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மெக்ஸிகோ கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது.

இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் ஒட்டுமொத்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும் வன்முறை அதிகரிக்கும் இதனால் மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு