இந்தியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த சாந்தனின் உடல் கொழும்பில் அவரது உறவினர்களிடம் இன்று மாலை 5 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது.
சாந்தனின் உடலின் இறுதி அஞ்சலி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை எட்டு மணிக்கு அவரது உடல் வவுனியாவில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அன்று மதியம் இரண்டு மணிக்கு அவரது ஊரில் இறுதி அஞ்சலிக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இதனையடுத்து திங்கட்கிழமை கல்லறையை நோக்கிய அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த சாந்தனின் உடல் நாளையதினம் 03.03.2024, மு.ப 11.00 மணிக்கு கிளிநொச்சி டிப்போ ச்சந்திக்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.