சுமந்திரன் எம்பியின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

Share

இணையவழி பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.

குறித்த சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை அதில் உள்வாங்காது அதனை நிறைவேற்றியமையினால் அது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரியே எம்.ஏ சுமந்திரன் அவர்களால் உயர் நீதிமன்றில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு