போக்குவரத்து விதிமீறல் குற்றத்தை மறைப்பதற்காக இலஞ்சம் பெற்ற களுத்துறை இத்தேபான பொலிஸ் நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைக்கவசம் அணியாது மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தேபான பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த குற்றத்தை மறைப்பதற்கு 10,000 ரூபாவை இலஞ்சம் கோரிய நிலையில் அதனை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே குறித்த இரண்டு இலஞ்சம் பெற்ற அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.