இலங்கையில் இருந்து கடந்த இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வெளியேற்றம் காரணமாக சுகாதாரத்துறையில் “கடுமையான நெருக்கடி” உருவாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவராச்சி எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.