சிகரட்டின் பயன்பாட்டினால் கண், மூளையில் ஏற்படும் விளைவுகள்!

Share

சிகரட்டுக்கள் என்ற இலத்திரனியல் புகையிலை பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் ஈ – சிகரட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அந்த சபை கோரியுள்ளது.

இதேவேளை 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஈ – சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீனரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட ஈ – சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த சில காலமாக இணையத்தளம் ஊடாக குறித்த நபர் இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஈ – சிகரட்டுக்கள் அதிகம் விரும்பப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு