விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணை பொலிஸார் நேற்று பார்வையிட சென்றுள்ளனர்.
எனினும் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதையடுத்து சீனப் பெண் தோட்டத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.