இலங்கை தொடர்பில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

Share

நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான பொருளாதாரப் பிரச்சினை கடன் மறுசீரமைப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூன் மாதத்திற்குள் முழு கடன் மறுசீரமைப்பையும் நிறைவு செய்வதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டுக் கடன் பலதரப்பு மற்றும் இருதரப்புக் கடன் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் பலதரப்புக் கடன் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இருதரப்பு வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

நாடுகளுக்கு இடையிலான கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரலுக்குள் இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களையும் ஜூன் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலையும் நிறைவு செய்வதே இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு