பரீட்சை வினாத்தாளில் வந்த வினாவினால் ஏற்பட்ட சர்ச்சை!

Share

வடமாகாண கல்வி திணைக்களத்தால் 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 3 ஆம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பாடப் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு நாடு இரு தேசம்” என தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் எவ்வாரான வாக்கியம் என்ற கேள்வியே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் அது தொடர்பிலான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதேவேளை குறித்த கேள்வி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

“ஒரு நாடு இரு தேசம்” எனும் சொல் தமிழ் அரசியல் கட்சி ஒன்று தமது கொள்கையாக கொண்டுள்ள நிலையில் அது தொடர்பிலான வினாத்தாளில் வந்தமையே சர்ச்சைக்கு காரணமாகும் எனவும் பேசப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு