தம்புள்ளை – சிசிரவத்தை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை சிசிரவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.
குறித்த மரத்தை சிலர் வெட்டிக் கொண்டிருந்த போது மரத்தின் கீழ் நின்றவரே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்முள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் அவர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.