புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கை!

Share

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க அவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பொலிஸாரின் அணிவகுப்பு, பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ பரிசோதனையும் வாகன பரிசோதனையும், அலுவலக கட்டடங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்கள் உள்ளிட்ட பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது. அத்தோடு பொலிஸாரின் நலன்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

இந்த அணிவகுப்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பங்கேற்றிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு