ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கவனத்திற்க் கொள்ளாது நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்துள்ளார்.
“ஐஜிபி அல்லது வேறு எவரும் எந்த தடையையும் விதிக்கலாம் ஆனால் நாங்கள் அனைத்து சட்டங்களையும் மீறி நாளை 50,000 பேரை கொழும்புக்கு அழைத்து வருவோம்” என மத்தும பண்டார ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
“2022 இல் எழுச்சியை முன்னோடியாகக் கொடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி தான் இம்முறையும் அதையே செய்ய நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்றார்.
நாங்கள் எங்கு அணிவகுத்துச் செல்வோம் என்பதை இப்போதைக்கு நாங்கள் வெளியிட மாட்டோம் ஆனால் நாளை சரியான நேரத்தில் அதை வெளிப்படுத்துவோம்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் வரி அதிகரிப்பு போன்ற அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
“சரியான நேரத்தில் நாங்கள் எங்கு சுற்றி வளைக்கப் போகிறோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்” என ஹிருணிகா பிரேமச்சந்திர இதன் போது தெரிவித்தார்.