இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ச.குகதாசன் திறந்த வாக்கெடுப்பின்மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதன்படி குகதாசனுக்கு 113 வாக்குகளும், சிறிநேசனுக்கு 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை பொதுச் செயலாளர் தெரிவானது நீண்ட இழுபறிக்கு மத்தியில் இடம்பெற்றதுடன் இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.