தமிழரசிக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் தொடரும் குழப்பநிலை!

Share

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவுக்காக கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்போது பொதுச் செயலாளர் தெரிவில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குகதாசன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்   சிறிநேசன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் தலைமைத்துவத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி ஒருவரும் இதில் போட்டியிட முற்பட்ட போது அதில் குழப்பங்களை தவிர்ப்பதற்காக மத்திய குழு குகதாசனின் பெயரை ஏக மனதாக தீர்மானித்திருந்தது.

குறித்த தீர்மானம் பொதுச்சபைக்கு வந்த போது பொதுச்சபை உறுப்பினர்கள் குகதாசனின் பெயரை ஏக மனதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டு வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில் வாக்கெடுப்பிற்கான கலந்துரையாடலானது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு