சகல தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முதற்பணி!

Share

கொள்கை ரீதியாக ஒருமித்து செயற்பட முன்வருமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறிருந்ததோ அவ்வாறான நிலையை தமிழ் மக்களின் அரசியல் ஏகப் பிரதிநிதிகள் என்ற நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எய்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ் கட்சிகளும் தம் கட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டு, தற்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழரசு கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் புத்துயிரூட்டுவதே தன் முன்னுள்ள முதற்பணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சகல தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு