இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

Share

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை டெங்கு நோயின் தாக்கம் காரணமாக யாழில் நேற்றையதினம் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில் இந்த ஆண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1440 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு