இஸ்ரேல் உளவு அமைப்பு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

Share

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களை குறிவைத்து ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் வீசிய ஏவுகணைகள், ஈராக், குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் உளவுத் துறை அலுவலகம் மீதும் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் குர்திஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருக்கிறது. பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீயும் கொல்லப்பட்டுள்ளார்.

குர்திஸ்தானின் அர்பில் நகரில் ஈரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்கள் மற்றும் உளவுத்துறை தலைமை அலுவலகத்தை அழித்ததாகஈரான் பாதுகாப்பு படை கூறியிருக்கிறது.

ஈரானின் தெற்கு நகரங்களான கெர்மன் மற்றும் ராஸ்கில் தாக்குதல் நடத்தி, ஈரானியர்களை கொன்றதற்கு பதிலடியாக இந்த தாக்கு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

https://youtu.be/SN92XmcdSbU?si=5q25gPPwpu9igQFG

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு