இவ் வருட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளில் சில வினாக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியமை தொடர்பில் மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்இ 38 வயதுடைய அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.
பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.