வலிப்பு ஏற்பட்ட பெண் திடீரென யாழ் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Share

திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ்பபாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராசா விஜயராணி (வயது 63) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

குறித்த பெண்ணுக்கு கடந்த 28 ஆம் திகதி திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூளையில் இரத்தக் கட்டி உறைந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு