பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Share

கிளிநொச்சி – பூநகரியில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பல கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெறவுள்ள நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் பொன்னாவெளி பகுதியில் சீமெந்து நிறுவனமொன்றுக்கு அகழ்வு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல் பொதுமக்கள் மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையிலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அரசியலமைப்பில் உரிமை காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்திற்கு விரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் பொலிஸாரினால் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய முடியுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்பாட்டத்தின் போது சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை தடுக்க பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு