மின்சாரக்கட்டணம் 50வீதத்தினால் குறைக்கப்படும்!

Share

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம் 50 வீதத்தினால் குறைக்கப்படுமென மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக பெய்த தொடர் மழையின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

நீரினால் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபம் நிச்சயமாக பொதுமக்களுக்கே கிடைக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு