புதுக்குடியிருப்பு பகுதியில் வீதிகளில் சாவிகளுடன் விடப்பட்ட பொதுமக்களின் மோட்டார் வாகனங்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ள சம்பவம் இன்றையதினம் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அண்மைய நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் வீதிகளில் சாவிகளுடன் விடப்பட்ட மோட்டார் வாகனங்களை மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.
பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற மோட்டார் சைக்கிள்களின் ஆவணங்களை பரிசோதனை செய்ததன் பின்னர் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டிருந்தது.