சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் படையில் இணையலாம் என டிலான் பெரேரா தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவுடனான கூட்டணியின் போது அழகப்பெரும உள்ளிட்டோர் அதில் இணையவில்லை என்றும் அதன் காரணமாக டலஸ் ஒரு துரோகி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைவராலும் கைவிடப்பட்ட தனிநபராக
சுதந்திர மக்கள் பேரவையில் அனைவராலும் கைவிடப்பட்ட தனிநபராக உள்ள டலஸ்அழப்பெரும தேசிய மக்கள் படையில் இணைய வாய்ப்புள்ளதாகவும் டிலான் பெரேரா கூறுகின்றார்.
சுதந்திர மக்கள் பேரவையில் உள்ள சிலர் நாசகாரர்கள் என்றும் சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தம்முடன் நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் டிலன்பெரேரா குறிப்பிடுகின்றார்.