போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மேலும் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.