திருகோணமலை உட்துறைமுக வீதியில் பேருந்துடன் ஒருவர் மோதுண்டதை அடுத்து குறித்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
திருகோணமலை உட்துறைமுக வீதியில் வீதியினை கடக்க முற்பட்ட ஒருவரை அவ்வீதியூடாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்களால் குறித்த பேருந்து அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று மாலை (01.01.2024) இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளானவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.