லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் அதிகரிப்பு!

Share

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

அத்துடன் 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 276 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 1,707 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 127 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 795 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு