அதிபர்கள் இன்றி இயங்கும் 54 தேசிய பாடசாலைகள்

Share

நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்று சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் கொழும்பு ரோயல் உட்பட ஐம்பத்து நான்கு தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது.

நிரந்தர அதிபர்கள் இல்லாததால் அந்த பாடசாலைகளின் நிர்வாக நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. அவற்றில் பதில் கடமையாற்றும் அதிபர்கள் பணிபுரிவதால் சில சமயங்களில் முறையான முடிவுகளை எடுக்கத் தயங்குவதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழுபத்து நான்கு தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்காக கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் படி ஐம்பத்து நான்கு பாடசாலைகளே விண்ணப்பித்திருந்தன. இதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்று சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அதிபர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு