கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுன் நிறை கொண்ட தங்க தகடுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காம ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி ருஹுணு கதிர்காமம் விகாரைக்கு வழங்கிய 38 பவுண் தங்க தட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.