எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் மேற்கொள்ள முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.