சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் போன்ற இடங்களில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், ஆலய நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு காலை வேளை பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.