மட்டக்களப்பில் 46 சிறைக்கைதிகள் விடுதலை!

Share

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.

அதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், இரண்டு பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு