யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றையதினம் திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் சாயுடை, மாவிட்டபுரம் , தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சலும் வாந்தியும் இருந்ததன் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குறித்த யுவதி டெங்கு தொற்றினால் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் உடற்கூற்று பரிசோதனைகளின்படி அவரது மரணத்திற்கான காரணம் என்ன என தெரியவில்லை. இந்நிலையில் அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.