நத்தார் காலத்தில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அதனை அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விசேட இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதன்படி 011 247 27 57 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இதே வேளை இன்று இரவு 11.45 மணியளவில் நாட்டின் பிரதான ஆராதனை நிகழ்வு ஹால்பே புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.