7 நாட்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 உற்பட 250 பேர் கைது!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (24) அதிகாலையும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிசாரினால் விசேடமான சுற்றி வளைப்புகள் பல நடாத்தப்பட்டு பல்வேறு கைது சம்பவங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மீட்கப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்றுவருகிறது.

இந்த வகையிலே சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலே பொலிசாரினால் முன்னெடுக்கப்படுகின்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக போதைப்பொருள் தொடர்பான சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்று இன்று அதிகாலை 4:30 மணியளவில் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு, தீர்த்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற வாடிகளில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று இன்று(24) காலை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரதுங்க அவர்களுடைய வழிகாட்டலிலே முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதாரண அவர்களது கண்காணிப்பில் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்க அவர்களுடைய நேரடி நெறிப்படுத்தலில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் இணைந்து சென்று முல்லைத்தீவு கள்ளபாடு தீர்த்தக்கரை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நடவடிக்கையின் போது போதை பொருட் பாவனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 காலை வரையான ஆறு நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலி ஓயா, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல், கொக்குளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு விசேடமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது 3 கிராம் ஹெரோயின், 480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லிக்கிராம் கேரள கஞ்சா, கஞ்சா செடி 5 மற்றும் 48 கிராம் வேறு வகையான போதை பொருட்கள், 443 லீற்றர் கசிப்பு, 1797 லீற்றர் கோடா உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்படரடுள்ளன.

இந்த கைது சம்பவங்களில் இரண்டு பெண்களும், 111ஆண்களுமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 25 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு