டெங்கு நோயினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

Share

நாட்டில் தற்போது நிலவும் கனமழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நலின் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

கடந்த 22ம் திகதி வரையில் இந்த வருடத்தில் மொத்தமாக 84000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெரும்பாலானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்திருப்பதாகவும் பொதுமக்கள் இதுகுறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு