சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்!

Share

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று(23) இடம்பெற்றது.

வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒழுங்குபடுத்தியது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு