மூன்று பெண்கள் அதிரடியாக கைது!

Share

வவுனியாவில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16000 mg கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பொலிசாரினால் விசேட போதை ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய வவுனியாவிலும் குறித்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் இரவு வவுனியா பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் கீழ் உள்ள பிரிவினர் திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனைக்கு அண்மையிலுள்ள வியாபார நிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்மார் என மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களது வீடுகளும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு