முள்ளியவளை புதாரிகுடாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Share

நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (20) சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கையில் 9 பரல்கள் மற்றும் கசிப்புக் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன இதன் போது மீட்க்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வரும் குறித்த பகுதியே பொலிசாரின் சிறப்பு அதிரடிப்படையினரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மீட்கப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களையும் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு