உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

Share

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

பெயர் விண்ணப்பித்த பாடங்கள், மொழி மூலம், பிறந்த திகதி உள்ளிட்டவற்றில் தவறுகள் இருந்தால் இதன்போது திருத்திக்கொள்ள முடியும்.

https://onlineexams.gov.lkonlinapps என்ற இணையதளம் ஊடாக திருத்தங்களை செய்துகொள்ள முடியும் என ஆணையாளர் கூறியுள்ளார்.

அத்தோடு 2023 க.பொ.த உயர்தர பரீட்சையை 2024 ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளது.

பரீட்சை கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குச் சென்று தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு