இலங்கை எடுத்த தீர்மானத்தால் அதிர்ந்து போன சீனா!

Share

இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு வருட காலத்துக்கு எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் இலங்கை கடற்பரப்புக்குள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இனிமேல் கப்பல்கள் பிரவேசிக்க முடியாது.

அதேவேளை சேவைகள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை துறைமுகங்களுக்கு வருகை தரமுடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்கு மற்றுமொரு விசேட ஆய்வுக் கப்பலை ஈடுபடுத்த சீனா இலங்கையிடம் அனுமதி கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்முறை ஆய்வுகளுக்கு சீனாவின் ஷியாங் யாங் ஹொங்03 எனும் கப்பல் பயன்படுத்தப்படவிருந்தது.

இந்த ஆய்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என சீன தூதரகம் எழுத்து மூலமாக அறிவித்திருந்த நிலையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தற்போது எடுத்திருக்கும் தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு