அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என கேட்டிருந்தேன்!

Share

அலி சப்ரியை நீதி அமைச்சராக நியமிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தாம் கேட்டுக்கொண்டதாக கொழும்பு பேராயர்கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சப்ரியை நீதி அமைச்சராக நியமித்த முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து பௌத்த பிக்கு ஒருவர் தம்மை எச்சரித்ததை அடுத்தே தாம் குறித்த கோரிக்கையை கோட்டாபயவிடம் விடுத்ததாக கர்தினால் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சப்ரியிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மதக் குழுவால் நடத்தப்பட்டது என்று தாம் நினைத்ததால் அவரின் நியமனம் குறித்து ஆரம்பத்தில் தாம் அதிருப்தியடைந்ததாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சதி இருப்பதாகத் தெரிந்ததும் தாம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக கர்தினால் கூறியுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கான உபகுழுவை நியமித்ததன் மூலம் கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கை இழக்கப்பட்டது எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகவியலாளர்களிடம் கூறியது போல் அவரைச் சந்திக்க தேவாலயம் தயாராக இல்லை என்று கர்தினால் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான எந்தவொரு எதிர்கால விசாரணையும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ் செய்யப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு