பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடளிக்க ஜனவரி 1 முதல் 24 மணி நேர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் இன்று (19) தெரிவித்தார்.
நாட்டின் எப்பகுதியிலிருந்தும் எந்த மொழியிலும் பிரச்சனைகளை ஹொட் லைன் எண்ணின் மூலம் தெரிவிக்க முடியும் என்று கூறிய அமைச்சர் பெண் பொலிஸ் அதிகாரிகளால் இயக்கப்படும்.
இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நம்பகரமான சேவை வழங்கப்படும் என தெரிவித்தார் .