லங்கா சதொச ஊடாக முட்டைகளை 35 ரூபாய்க்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முட்டையின் விலை 50 முதல் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
உள்ளூர் சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து ஒன்றரை கோடி முட்டைகளுடனான கப்பலொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய் என்ற விலையில் விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.