மட்டக்களப்பில் நடுநிலையாக எனது பயணம் தொடரும்!

Share

நான் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாகவும் நடக்கமாட்டேன் பக்கச்சார்பாகவும் செயற்படமாட்டேன் என புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தெரிவித்தார்.

இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திகதி தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஸினி சிறிகாந்த் மற்றும் பிரதேச செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து தனது அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு