ஈழத்துக்குயில் கில்மிஷா வரலாற்று சாதனையை பதிவு செய்தார்!

Share

தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர்.

அதன்படி இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் கால் பதித்துள்ளதோடு, ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற கிராண்ட் பைனலில் இறுதி முடிவு வெளியாகியுள்ளது.

அதன்படி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன் ரன்னராக ருத்ரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து அரங்கம் முழுவதும் அதிர ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு