தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அடுத்த வருடம் எளிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தங்களை குறைக்கும் வகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பறையில் முப்பது வீத புள்ளிகளைப் பெற வேண்டும் எனவும் அதற்காக பிள்ளைகள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்வது முக்கியம் எனவும் தெரிவித்தார்.