மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை பதிவிடுவோருக்கு எதிராக முறைபாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
0112300637இ என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவும் 0112381045 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[email protected]என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை அளிக்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.