விவசாய மேன்மை விருது வழங்கல் நிகழ்வும் கண்காட்சியும்!

Share

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் முல்லைத்தீவு விவசாய திணைக்களமும் இணைந்து நடாத்தும் விவசாய மேன்மை விருது வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம்(13.12.2023) காலை 09.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ம.ஜெகூ அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் -வடமாகாணம் திருமதி.ச.செந்தில்குமரன் அவர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.

விவசாய மேன்மை விருது வழங்கல் மற்றும் கண்காட்சி நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாயத்துறையை மேலும் முன்னேற்றும் வகையில் விவசாயம் மற்றும் உணவுத் துறையை முன்னோக்கி நகர்த்தும் சிறந்த முயற்சியாளர்களை அங்கீகரித்து ஊக்குவித்தல், விவசாயம் உணவுத் துறையின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற குறிக்கோள்களை மையமாக கொண்டு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிறந்த பயிர்ச்செய்கையாளர்கள், சிறந்த கால்நடை வளப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் “நவீன விவசாயம்” எனும் தொனிப் பொருளில் கலாநிதி எஸ்.ஜெ.அரசகேசரி அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் சி.குணபாலன், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் க.லிங்கேஸ்வரன், மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், , சமுர்த்தி பணிப்பாளர் மு.முபராக் மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.க.ஜெயபவானி, முல்லைத்தீவு விவசாய திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. யாமினி மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு